ஹஜ் உள்ளிட்ட அனைத்து புனித யாத்திரைகளுக்கும் வரி விலக்கு..? இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை..!

9 November 2020, 12:43 pm
kaaba_mecca_hajj_updatenews360
Quick Share

முஸ்லீம் மதகுருமார்கள் ஹஜ் மற்றும் பிற மத ரீதியிலான யாத்திரைகளுக்கு ஜிஎஸ்டி உள்ளிட்ட அனைத்து வகையான வரிகளிலிருந்தும் விலக்கு அளிக்க வேண்டும் என்றும், ஹஜ் யாத்ரீகர்களுக்கு வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யும் நிபந்தனை நீக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

இந்திய இஸ்லாமிய மையத்தின் தலைவர் மௌலானா காலித் ரஷீத் ஃபாரங்கி மஹாலி இந்திய இஸ்லாமிய மையத்தின் ஹஜ் தொடர்பான கூட்டம் நேற்று நடைபெற்றதாக தெரிவித்தார்.

கூட்டத்தில், ஹஜ் மற்றும் பிற மத ரீதியிலான யாத்திரைகளுக்கு ஜிஎஸ்டி உள்ளிட்ட அனைத்து வகையான வரிகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டது.

ஹஜ் யாத்திரைக்கு தற்போது ஐந்து சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஏராளமான யாத்ரீகர்கள் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஹஜ் யாத்ரீகர்களுக்கு வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான நிபந்தனையும் நீக்கப்பட வேண்டும் என்றும் இந்த நிபந்தனையை அவர்கள் நிறைவேற்றுவது சாத்தியமில்லை என்றும் மஹாலி கூறினார்.

சவூதி அரேபிய அரசாங்கமும் இந்திய ஹஜ் கவுன்சிலும் வழங்கிய ஆலோசனையை முழுமையாக பின்பற்றி செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Views: - 37

0

0