மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!!…

Author: Aarthi
11 October 2020, 5:21 pm
cyclone india - updatenews360
Quick Share

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்தமான் மற்றும் அதனை ஒட்டி உள்ள கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மிகுந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

rainy-updatenews360

மேலும் இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கோவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், வங்கக் கடலில் அந்தமான் பகுதியில் வருகிற 14ம் தேதி புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

Delhi_Rains_Bus_Submerged_UpdateNews360

மேலும், ஆந்திரா, தெலங்கானா, தெற்கு ஒடிசா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்யும் என்றும், பல்வேறு இடங்களில் மிக மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Views: - 43

0

0