“திட்டமிட்டபடி செப்-13ல் நீட் தேர்வு நடைபெறும்” – மத்திய அரசு திட்டவட்டம்..!

13 August 2020, 2:09 pm
Quick Share

நீட் நுழைவுத் தேர்வு ரத்து இல்லை, திட்டமிட்டபடி நடத்தப்படும் எனவும் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த இயலாது என்றும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

செப்.13 ஆம் தேதி நடைபெறும் நீர் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த முடியுமா அல்லது வளைகுடா நாடுகளில் தேர்வு மையங்களை அமைக்க முடியுமா என்று கேட்டு மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

அதற்கு பதிலளித்துள்ள தேசிய தேர்வு முகமை, ஆன் லைன் மூலம் தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் மறுத்துவிட்டதாகக் கூறியுள்ளது.

மேலும், வெளிநாடுகளில் தேர்வு மையங்களை அமைக்க முடியாது என்றும் கூறியுள்ளது. மத்திய அரசு போதிய விமானங்களை இயக்கிவருவதால் மாணவர்களின் கோரிக்கையை ஏற்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்குத் தயாராக மாணவர்களுக்கு போதிய அவகாசம் கொடுத்து அறிவிப்புகள் வெளியிட்டுள்ளதால் தேர்வை ஒத்திவைக்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு பதில் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளது.