“நீங்க போட்ட கோட்டையே நாங்க ஏற்கல”..! சீனாவுக்கு ஷாக் கொடுத்த இந்தியா..!

29 September 2020, 6:01 pm
China-India_UpdateNews360
Quick Share

லடாக் யூனியன் பிரதேசத்தை தாங்கள் அங்கீகரிக்கவில்லை என்று சீனா கூறிய ஒரு நாளில், எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு குறித்து ஒருதலைப்பட்சமான விளக்கத்தை முன்வைப்பதைத் தவிர்க்குமாறு இந்தியா சீனாவிற்கு அறிவுறுத்தியுள்ளது.

ஒருதலைப்பட்சமாக வரையறுக்கப்பட்ட 1959 எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு என அழைக்கப்படுவதை இந்திய அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நடைமுறை எல்லையை மீறியதாக சீனா மீது குற்றம் சாட்டுவதற்கும், ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்ற முயற்சிப்பதற்கும் மத்திய வெளியுறவு அமைச்சகம் எந்த வார்த்தையும் கூறவில்லை. “மேற்குத் செக்டரின் பல்வேறு பகுதிகளில் எல்லையை மீறுவதற்கான முயற்சிகளால் சீனா தான் ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்ற முயன்றது” என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியது.

“இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் சீனாவின் நிலைப்பாடு குறித்து சீன வெளியுறவு அமைச்சக அறிக்கையை மேற்கோள் காட்டி வெளியான செய்தியைப் பார்த்தோம். ஒருதலைப்பட்சமாக வரையறுக்கப்பட்ட 1959 எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு என அழைக்கப்படுவதை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியாவின் நிலைப்பாடு சீனர்கள் உள்பட அனைவராலும் நன்கு அறியப்பட்டதாகும்.” என வெளியுறவு அமைச்சகம் கூறியது.

“இரு தரப்பினரும் 2003 வரை எல்லைக்கட்டுப்பாட்டுக்கோட்டை தெளிவுபடுத்துவதற்கும் உறுதிப்படுத்துவதற்கும் ஒரு முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் சீனர்கள் விருப்பம் காட்டாததால் இந்த செயல்முறை மேலும் தொடர முடியவில்லை. எனவே, ஒரே ஒரு எல்லைக்கட்டுப்பாட்டுக்கோடு மட்டுமே உள்ளது என்று சீனர்கள் வலியுறுத்துவது அவர்கள் செய்துள்ள உறுதியான கடமைகளுக்கு முரணானது.” என்று அது மேலும் கூறியது.

முழு உடன்படிக்கைகளையும் புரிந்துணர்வுகளையும் முழுமையாகப் பின்பற்றவும், எல்லையில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒருதலைப்பட்ச விளக்கத்தை முன்னெடுப்பதைத் தவிர்க்கவும் இந்தியா சீனாவுக்கு அழைப்பு விடுத்தது.

Views: - 9

0

0