கொரோனா அச்சம்: ம.பி.யில் இன்று முதல் இரவுநேர ஊரங்கு: மாஸ்க் கட்டாயம்….அரசு எச்சரிக்கை…!!

Author: Aarthi Sivakumar
17 March 2021, 6:20 pm
mp night curfew - updatenews360
Quick Share

மத்தியபிரதேசம்: மத்திய பிரதேசத்தின் பல்வேறு நகரங்களில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முன்பு இல்லாத வகையில், 700க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் போபால் மற்றும் இந்தூர் நகரங்களில் இன்று முதல் 10 மணி முதல் மாலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மத்திய பிரதேச அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கடைகள் முழுவதுமாக அடைக்கப்படும் மக்கள் வெளியில் வருவதை தடுக்க போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போபால், இந்தூர், ஜபல்பூர், குவாலியர், கார்கோன், உஜ்ஜைன், ரத்லம், சிந்த்வாரா உள்பட 10 நகரங்களில் ஹோலி பண்டிகை கொண்டாட அனுமதி கிடையாது என்றும் அரசு அறிவித்துள்ளது. மேலும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அவர்கள் திறந்த சிறைகளில் அடைக்கப்படுவார்கள் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Views: - 183

0

0