சீனா கலந்துகொள்வதால் ரஷ்ய ராணுவப் பயிற்சியில் பங்கேற்க மறுப்பு..? இந்தியா அதிரடி முடிவு..!

30 August 2020, 9:04 am
Indian_Army_UpdateNews360
Quick Share

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நடந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், தெற்கு ரஷ்யாவின் அஸ்ட்ராகான் பகுதியில் நடைபெறவிருக்கும் காவ்காஸ் -2020 பன்னாட்டு இராணுவப் பயிற்சியில் இந்தியா பங்கேற்காது என்று இந்தியா ரஷ்யாவிடம் தெரிவிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

சீன மற்றும் பாகிஸ்தான் வீரர்களும் இந்த பன்னாட்டு போர்ப் பயிற்சியில் கலந்து கொள்ள உள்ளது.

உலகெங்கிலும் மோசமடைந்து வரும் கொரோனா நிலைமையை இந்திய அதிகாரிகள் கணக்கில் எடுத்துக்கொண்டாலும், எல்லையில் இந்தியாவும் சீனாவும் மோதலில் உள்ளதால், வழக்கம்போல சீனாவுடன் எந்த தொடர்பும் மேற்கொள்ள மாட்டோம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

“இது தொடர்பாக டெல்லியில் ஒரு உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. இதில் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்புத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பிறகு, சீன மற்றும் பாகிஸ்தானிய இராணுவ வீரர்களும் கலந்து கொள்ளும் பன்முகப் பயிற்சியில் பங்கேற்பது சரியல்ல என்று விவாதிக்கப்பட்டது.” என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டத்திற்காக ராஜ்நாத் சிங் செப்டம்பர் 4-6 தேதிகளில் ரஷ்யாவுக்கு செல்ல உள்ளார். அப்போது இந்தியாவின் எல்லையில் சீனாவின் விரிவாக்க கொள்கைகளை இந்தியா உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெற்கு ரஷ்யாவுக்கு சுமார் 200 வீரர்களைக் கொண்ட முத்தரப்புப் பயிற்சியில் பங்கேற்க ரஷ்யா இந்தியாவை அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 0 View

0

0