அட்ராசக்க….!! ஒலிம்பிக்கில் சாதித்த லவ்லினா… புதுப்பொலிவு பெறும் கிராமம்… மகிழ்ச்சியில் கிராம மக்கள்…!!

Author: Babu
3 August 2021, 8:47 pm
lovlina - updatenews360
Quick Share

டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் 69 கிலோ பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா பதக்கத்தை உறுதி செய்தார். அவருக்கு இந்திய அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, லவ்லினாவின் வெற்றியை, அசாம் மாநிலத்தின் கோல்காட் மாவட்டத்தில் உள்ள அவரது கிராமமான பாரமுதியா மக்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், லவ்லினாவின் வெற்றிக்கு பரிசாக, சாலை பராமரிப்பின்றி கிடந்த பாரமுதியா கிராமத்தில் இருந்து அவரது இல்லத்தை இணைக்கும் சுமார் 3.5 கிலோ மீட்டர் தூரம் வரையிலான சாலையை போட்டுக் கொடுத்துள்ளார் எம்எல்ஏ பிஸ்வாஜித்.

“ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற லவ்லினாவிற்கு நாங்கள் கொடுக்கும் பரிசு இது. அவர் தங்கம் வெல்ல வேண்டும். இதன் விளைவாக விளையாட்டுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள் இந்த கிராமத்தில் உருவாக்கித் தரப்படும்,” என்று எம்எல்ஏ பிஸ்வாஜித் தெரிவித்தார்.

Views: - 250

1

0