ஊரடங்கு காலத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 50,000 நிறுவனங்கள்..! மத்திய இணை நிதியமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல்..!

15 September 2020, 7:17 pm
anurag_thakur_updatenews360
Quick Share

நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் 2020 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 50,000’க்கும் மேற்பட்ட புதிய நிறுவனங்கள் அரசாங்கத்திடம் பதிவு செய்துள்ளன என்று மத்திய இணை நிதியமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று மாநிலங்களவையில் தெரிவித்தார்.

கொரோனாவை அடுத்து கடந்த ஐந்து மாதங்களில் லட்சக்கணக்கான நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கிறதா என்று கேட்டு ரிபுன் போரா எழுப்பிய கேள்விக்கு அனுராக் தாக்கூர் பதில் அளித்துள்ளார்.

இந்த காலகட்டத்தில் 3300’க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் பெயர்களை நீக்குவதற்கோ அல்லது மூடுவதற்கோ படிவத்தை நிரப்பியுள்ளன என்று தாக்கூர் கூறினார். கடந்த ஐந்து மாதங்களில் 51,807 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 3333 நிறுவனங்கள் மூடப்பட்டதாக தாகூர் குறிப்பிட்டுள்ளார்.

இணை நிதியமைச்சர் அளித்த பதிலின்படி, மகாராஷ்டிரா அதிகபட்சமாக 8,677 நிறுவனங்களையும், டெல்லியின் என்.சி.டி 5,803 ஆகவும், உத்தரப்பிரதேசத்தில் 5,469 புதிய நிறுவனங்களும் நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் கொரோனா வெடித்த போதிலும் பதிவு செய்துள்ளன. இது நாடு தழுவிய ஊரடங்கு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் இடையூறுக்கு வழிவகுத்தது எனும் கூற்றை தகர்த்துள்ளது.

கார்ப்பரேட் வரி விகிதத்தை குறைப்பது இந்தியாவை உலகளவில் போட்டி மற்றும் முதலீட்டிற்கான விருப்பமான இடமாக மாற்றியுள்ளது என்றும் இந்த மைல்கல் சீர்திருத்தத்தின் தாக்கம் வரும் ஆண்டுகளில் உணரப்படும் என்றும் அரசாங்கம் நம்புகிறது.

“இந்தியாவை உலகளவில் போட்டி மற்றும் முதலீட்டிற்கான விருப்பமான இடமாக மாற்றும் முயற்சியில், உற்பத்தித் துறையில் புதிய நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி விகிதத்தை 15 சதவீதமாகவும், 2019 செப்டம்பரில் இருக்கும் நிறுவனங்களுக்கு 22 சதவீதமாகவும் குறைத்தது.” என்று மக்களவைக்கு நேற்று அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்தார்.

அரசாங்கம் கடந்த ஆண்டு அடிப்படை நிறுவன வரி விகிதத்தை 30%’இலிருந்து 22%’ஆக குறைத்தது. இது இந்தியாவில் கார்ப்பரேட் வரி விகிதங்களை உலகின் மிகக் குறைவானவையாக இருக்க உதவியுள்ளது. “முதலீட்டு முடிவுகள் நீண்ட கால முன்னோக்கைக் கொண்டிருப்பதால், இந்த மைல்கல் சீர்திருத்தத்தின் தாக்கம் வரும் ஆண்டுகளில் உணரப்படும்” என்று அவர் கூறினார்.

Views: - 0

0

0