பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு வருகை தந்த 60 வெளிநாட்டுத் தூதர்கள்..! மத்திய வெளியுறவுத் துறை சிறப்பு ஏற்பாடு..!

9 December 2020, 4:03 pm
Covaxin_UpdateNews360 (2)
Quick Share

கொரோனா வைரஸிற்கான இந்தியாவின் முதல் உள்நாட்டு தடுப்பூசியான கோவாக்சினை உருவாக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவை 60’க்கும் மேற்பட்ட நாடுகளின் தூதர்கள் இன்று பார்வையிட்டனர்.

சிறப்பு ஏர் இந்தியா விமானம் மூலம் ஹைதராபாத்தில் தரையிறங்கிய பின்னர், வெளிநாடுகளின் தூதர்களும் உயர் அலுவலர்களும், ஹைதராபாத்தின் புறநகரில் உள்ள ஜீனோம் வேலியில் உள்ள பாரத் பயோடெக் மற்றும் பயோலாஜிக்கல் ஈ நிறுவனங்களை பார்வையிட்டனர்.

பாரத் பயோடெக் தலைவர் கிஷ்ணா எல்லா தனது நிறுவனம் மற்றும் தடுப்பூசி உற்பத்தியில் அது அடைந்த மைல்கற்கள் குறித்து ஒரு பவர் பாயிண்ட் விளக்கக்காட்சியை தூதர்களுக்கு வழங்கினார். பின்னர், தடுப்பூசி உற்பத்தி பிரிவைக் சுற்றிப் பார்க்க பிரதிநிதிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

மத்திய வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள வெளிநாட்டு தூதர்களின் வருகை, தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கும் வழங்குவதற்கும் கூட்டாண்மைகளை வளர்ப்பதற்கான இந்தியாவின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் எனக் கூறப்படுகிறது.

கடந்த மாதம், நாட்டில் நடைபெற்று வரும் தடுப்பூசி சோதனைகள் மற்றும் அளவுகளை உற்பத்தி செய்து வழங்குவதற்கான முயற்சிகள் குறித்து தூதர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

பாரத் பயோடெக் மற்றும் பயோலாஜிக்கல் ஈ இரண்டிலும், தடுப்பூசிகளின் வளர்ச்சியில் இதுவரை பெற்றுள்ள முன்னேற்றம் மற்றும் இரு நிறுவனங்களின் தடுப்பூசிகள் கட்டுப்பாட்டாளர்களிடமிருந்து ஒப்புதல் பெற்றபின் இரு நிறுவனங்களின் உற்பத்திக்கான திட்டங்கள் குறித்து வெளிநாட்டு தூதர்களுக்கு தெரிவிக்கப்படும்.

அனைத்து கொரோனா நெறிமுறைகளையும் பின்பற்றி தூதர்கள் வருகைக்காக தெலுங்கானா அரசாங்கம் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தது. மாநில அதிகாரிகள் ஐந்து நன்கு பொருத்தப்பட்ட பேருந்துகள் மற்றும் ஒரு சிறப்பு மருத்துவ குழுவை இதற்காக ஏற்பாடு செய்தனர்.

Views: - 0

0

0