கொள்ளை அழகு.. .நிரம்பி வழியும் நீர்தேக்கம் : தண்ணீர் ஆர்ப்பரிக்கும் ஸ்ரீசைலம் அணை… கண்கொள்ளா காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
8 September 2022, 3:59 pm
Sri Sailam dam- Updatenews360
Quick Share

ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நீர்த்தேக்கத்திற்கு தற்போது வினாடிக்கு மூன்று லட்சத்து 75 ஆயிரத்து 446 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

எனவே அணையில் உள்ள 10 மதகுகளையும் 12 அடி உயரத்துக்கு உயர்த்தி வினாடிக்கு மூன்று லட்சத்து 80 ஆயிரத்து 816 கன அடி தண்ணீர் கோதாவரி நதியில் வெளியேற்றப்படுகிறது.

இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 885 அடியாக உள்ள நிலையில் தற்போது அணையில் 884.60 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. திறந்து விடப்பட்ட தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடும் காட்சியை கண்டு செல்பி எடுத்து கொள்ள அந்தப் பகுதி மக்கள் அங்கு திரண்டு உள்ளனர்.

Views: - 237

0

0