அசாமில் இன்று முதல் மீண்டும் பூங்காக்கள் திறப்பு…!!

21 October 2020, 10:42 am
kaziranag - updatenews360
Quick Share

கொரோனா தொற்று பரவல் காரணமாக அசாம் மாநிலத்தில் மூடப்பட்டிருந்த பூங்காக்கள் இன்று முதல் திறக்கப்படுகின்றன.

அசாம் மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து சுற்றுலா தளங்கள் மற்றும் பூங்காக்கள் மூடப்பட்டன. இந்நிலையில் அடுத்தடுத்த ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, இயல்பு நடைமுறை மெல்ல திரும்புகின்றது.

இதனையடுத்து, இன்றுமுதல் அசாமில் உள்ள தேசியப் பூங்காக்கள் மற்றும் உயிரியல் பூங்காக்கள் திறக்கப்படுகின்றன. மிகவும் பிரபலமான காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தை முதலமைச்சர் சர்பானந்தா சோனாவால் இன்று திறந்து வைக்கிறார்.

பூங்காக்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீண்டும் பூங்கா திறக்கப்பட்ட சில நாட்களுக்கு யானை சவாரிகள் செயல்பட அனுமதிக்கப்படாது என அறவிக்கப்பட்டுள்ளது,

மேலும், நவம்பர் மாதம் முதல் பழைய நடைமுறை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 28

0

0