நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் செப்.,14 முதல் தொடக்கம் : பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு!!

1 September 2020, 10:07 am
Parliament Begins - Updatenews360
Quick Share

டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 14-ந் தேதி தொடங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வழக்கமாக நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் ஜூலை இறுதியில் தொடங்கும். ஆனால் தற்போதைய கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் பிறப்பிக்கபபட்டுள்ளதால், இந்த தொடர் தள்ளிப்போனது.

இருப்பினும் பட்ஜெட் தொடர் முடிந்து சுமார் 6 மாதங்கள் ஆகும் நிலையில் மழைக்கால தொடரை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி வருகிற 14-ந் தேதி முதல் இந்த தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து நேற்று மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் அக்டோபர் 1-ந் தேதி வரை நடத்தப்படும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த கூட்டத்தொடர் தொடர்ச்சியாக 18 அமர்வுகள் நடத்தப்படும் எனபவும், இதில் எந்த விடுமுறையோ, வார விடுமுறையோ இல்லை என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல இரு அவைகளிலும், கொரோனா பரவலை தடுக்கம் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதுகாக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அனைத்து உறுப்பினர்களும் அவை நிகழ்வுகளில் பங்கேற்க வசதியாக பிரமாண்ட திரைகள், சிறப்பு ஒலி அமைப்புகள் என பல்வேறு முதல் முறை நிகழ்வுகள் தயாராகி வருகின்றன. கூட்டம் கூடுவதை தவிர்க்க அதிகாரிகள், ஊடகத்தினருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிகிறது.

Views: - 10

0

0