ரயில் பெட்டிகளை தனியாருக்கு விற்பனை செய்ய திட்டம் : சுற்றுலா துறையை மேம்படுத்த ரயில்வே துறை முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
11 September 2021, 10:01 pm
Train Sales - Updatenews360
Quick Share

தனியார் நிறுவனங்களிடம் ரயில் பெட்டிகளை விற்பனை செய்வதற்கும், குத்தகைக்கு விடுவதற்கும் ரயில்வே துறை முடிவெடுத்துள்ளது.

இது தொடர்பாக ரயில்வே துறை வெளியிட்ட அறிக்கையில், பெட்டிகளுடன் கூடிய ரயில்களை தனியார் நிறுவனங்களிடம் விற்பனை செய்வதற்கும், குத்தகைக்கு விடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப் பட்டு உள்ளது. கலாச்சாரம், மதம் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் வகையில் பிரத்யேகமாக ரயில்களை இயக்க விரும்பும் நிறுவனங்களுக்கு இந்த ரயில்களை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 16 பெட்டிகளுடன் கூடிய ரயிலை மட்டுமே விலைக்கு வாங்கவோ அல்லது குத்தகைக்கு பெறவோ முடியும். அதேபோல், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் குத்தகைக்கு எடுக்கலாம்.

பின், தேவைக்கேற்ப குத்தகை காலம் நீட்டிக்கப்படலாம். இந்த திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கொள்கைகளை வகுக்க, குழு ஒன்றை மத்திய ரயில்வே துறை அமைத்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 182

0

0