பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு எட்டாவது தவணைத் தொகை 2,000 ரூபாய் நாளை வெளியீடு..! மத்திய அரசு அறிவிப்பு..!

13 May 2021, 5:48 pm
pm_kisan_updatenews360
Quick Share

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) திட்டத்தின் கீழ் அடுத்த தவணை ரூ 2,000’ஐ மத்திய அரசு நாளை வழங்க உள்ளது. இதன் மூலம் 9.5 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ 19,000 கோடியை அரசு மாற்றும். இந்த திட்டம் 2019’இல் தொடங்கப்பட்டதிலிருந்து இது 8 வது தவணையாக இருக்கும்.

இந்த திட்டத்தின் கீழ் ஒரு நாளில் அரசாங்கம் செலுத்த வேண்டிய மிக உயர்ந்த தொகை இதுவாகும். மேற்கு வங்காள விவசாயிகளுக்கும் இத்திட்டத்தின் பலன்கள் கிடைக்கும். அந்த மாநில விவசாயிகளுக்கு நிதி உதவி கிடைப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி தவணை கடந்த ஆண்டு டிசம்பர் 25 அன்று வெளியிடப்பட்டது. சுமார் 9 கோடி விவசாயிகளுக்கு சுமார் 18,000 கோடி ரூபாயை மத்திய அரசாங்கம் அப்போது வழங்கியது.

இது தொடர்பாக நடக்கும் நிகழ்வில் பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் காலை 11 மணிக்கு உரையாடுவார் என்று மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் இந்த நிகழ்வை மக்கள் நேரடியாக pmindiawebcast.nic.in அல்லது தூர்தர்ஷனில் பார்க்க முடியும்.

பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ், மோடி அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ 6,000 நிதி உதவி வழங்குகிறது. இந்த தொகை தலா ரூ 2,000 என்ற 3 சம தவணைகளில் செலுத்தப்படும். முதல் தவணை டிசம்பர் மற்றும் மார்ச் மாதங்களுக்கும், இரண்டாவது ஏப்ரல் முதல் ஜூலை வரையிலும், மூன்றாவது தவணை ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலும் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த நிதி நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது.

2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருத்தல் அல்லது உரிமையைக் கொண்ட சிறு மற்றும் குறு விவசாய குடும்பங்களுக்கு இந்த வருமான ஆதரவு வழங்கப்படுகிறது. மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் பண ஆதரவுக்கு தகுதியான விவசாய குடும்பங்களை அடையாளம் காண்கின்றன.

நேரடி நன்மை பரிமாற்றம் (டிபிடி) முறை மூலம் இந்த தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளின் தரவை அரசாங்கம் வைத்திருக்கிறது. பயனாளிகளின் பட்டியல் pmkisan.gov.in இல் கிடைக்கிறது

Views: - 142

0

0