அனைவருக்கும் இலவச தடுப்பூசி : முன்களப் பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை துவக்கி வைத்த பிரதமர் மோடி உறுதி

18 June 2021, 1:49 pm
Modi - corona vaccination - updatenews360
Quick Share

டெல்லி : அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 3வது அலையை சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அதன்படி, முன்கள பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி காணொளி காட்சியின் மூலம் தொடங்கி வைத்தார்.

பின்னர், அவர் பேசியதாவது:- பேரிடர் காலங்களில் எப்படி மீளுவது, எழுவது என்பதை நமது நாட்டிற்கும், முன்களப் பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று கற்றுக்கொடுத்துள்ளது. நாடு முழுவதும் ஒரு லட்சம் முன்களப்பணியாளர்களை தயார்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டத்தை நிபுணர்கள் உருவாக்கியுள்ளனர். இதன்மூலம், கொரோனாவை எதிர்த்து போராட முன்களப்பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

1,500 ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள எப்படி கையாளப்பட்டார்களோ, அதுபோன்று 21ம் தேதி முதல் 45 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் கையாளப்படுவார்கள், எனக் கூறினார்.

Views: - 165

0

0