இன்று மகாத்மா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி பிறந்தநாள்: நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை….!!!!

Author: Aarthi
2 October 2020, 9:55 am
moditributesgandhi-updatenews360
Quick Share

மகாத்மா காந்தியின் 151வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் தேசத்தந்தை என அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் 151வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி ராஜ் காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதேபோல், முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் 116வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன்படி, டெல்லி விஜய்காட்-ல் உள்ள லால்பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பிரதமர் மோடி ட்வீட்:

மகாத்மா காந்தி மற்றும் லால்பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது,

அன்பான பாபுவை காந்தி ஜெயந்தியால் வணங்குகிறேன். அவரது வாழ்க்கை மற்றும் உன்னத எண்ணங்களிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. வளமான மற்றும் இரக்கமுள்ள இந்தியாவை உருவாக்குவதில் பாபுவின் கொள்கைகள் நமக்கு வழிகாட்டுகின்றன என்று மோடி பதிவிட்டுள்ளார்.

லால் பகதூர் சாஸ்திரி ஜி தாழ்மையும் உறுதியும் கொண்டிருந்தார். அவர் எளிமையை சுருக்கமாகக் காட்டி, நமது தேசத்தின் நலனுக்காக வாழ்ந்தார். அவர் இந்தியாவுக்காக செய்த எல்லாவற்றிற்கும் ஆழ்ந்த நன்றியுடன் அவரது ஜெயந்தியில் அவரை நினைவில் கொள்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

Views: - 50

0

0