கொரோனா ஊரடங்கு : துறை ஊழியர்களிடம் பேசிய பிரகாஷ் ஜவடேகர்..!

26 March 2020, 2:56 pm
Prakash_Javadekar_Updatenews360
Quick Share

புதுடெல்லி : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று தனக்கு கீழ் உள்ள மூன்று அமைச்சகங்களின் அதிகாரிகளுடன் ஆடியோ கான்பெரன்ஸ் மூலம் உரையாற்றியபோது, 21 நாள் தடை காலத்தில் மகிழ்ச்சியாக இருங்கள் மற்றும் வேலையில் கவனம் செலுத்துமாறு கூறினார்.

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் கனரக தொழில்கள் பொது நிறுவன அமைச்சகம் ஆகிய இலாகாக்களை ஜவடேகர் வைத்திருக்கிறார்.

“எனது 3 அமைச்சகங்களின் 400 அதிகாரிகளுடன் ஒன்றாக ஆடியோ பிரிட்ஜ் மூலம் தொடர்பு கொண்டேன். அவர்களை ‘நேர்மறையாக இருங்கள்’ ‘வீட்டிலேயே இருங்கள்’ ‘உறுதியாக இருங்கள்’ மற்றும் ‘மகிழ்ச்சியாக இருங்கள்’ என்று சொன்னேன்.” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

மற்றொரு ட்வீட்டில், அடுத்த 20 நாட்களில் அனைத்து அதிகாரிகளின் பணிப்பட்டியலைத் தயாரிக்குமாறு அவர்களிடம் கேட்டுள்ளதாக அவர் கூறினார்.

“அனைத்து 3 அமைச்சகங்களிலும் 20 நாட்களில் அர்த்தமுள்ள பணிகள் நிறைவேற்றப்படும் என்று நான் நம்புகிறேன்.” என்று அவர் மற்றொரு ட்வீட்டில் தெரிவித்தார்.

இதற்கிடையில், பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக அதிகாரிகளுக்கு எப்போதும் தொடர்புகொள்ளக்கூடிய வகையில் இருக்குமாறு அறிவுறுத்தியது.

“நெருக்கடியான இந்த நேரத்தில் ஊடகங்களும் தகவல்தொடர்புகளும் ஒரு இன்றியமையாத சேவையாகும் என்பதை வலியுறுத்தி, பிரகாஷ் ஜவடேகர் ஐ & பி அமைச்சகத்தின் அதிகாரிகளுக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றும் சரியான மற்றும் உண்மையான தகவல்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கு வழக்கத்தை விட கடினமாக உழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.” என பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா ட்வீட் செய்தது.

Leave a Reply