“பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடம்” – மருத்துவமனை தகவல்..!

21 August 2020, 12:31 pm
Quick Share

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என, மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

இந்திய குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு 84 வயதாகிறது. அவர் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி டெல்லி ராணுவ ஆராயச்சி மருத்துவமனையில் மூளையில் ஏற்பட்ட கட்டியை அகற்ற அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அதற்காக எடுக்கப்பட்ட பரிசோதனையின்போது பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு தீவிர சிக்கை அளிக்கப்பட்ட நிலையில், திடீரென அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்து.

அதனை தொடர்ந்து வென்டிலேட்டர் மூலம் அவருக்கி சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், அவரின் உடல்நிலை குறித்து தொடர்ந்து தகவல் அளித்து வருகின்றனர்.

நேற்று அவரின் உடல்நிலையில் சிறிதளவு முன்னேற்றம் இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள் இன்று அவரின் உடல்நிலை மேலும் கவலைக்கிடமாக உள்ளது என கூறியுள்ளனர்.