பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் நேற்றிலிருந்து மேலும் பின்னடைவு..!

31 August 2020, 11:01 am
Quick Share

முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் நேற்றிலிருந்து மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

இந்திய குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 10-ம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதற்காக எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து கோமா நிலைக்கு சென்ற அவருக்கு, வெண்டிலேட்டர் கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும்,
அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் நாள்தொறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் ஆழ்ந்த கோமாவில் உள்ள பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரல் தொற்று மற்றும் சிறுநீரக செயலிழப்புக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக தெரிவித்திருந்த மருத்துவமனை நிர்வாகம் தற்போது, அவரின் உடல்நிலையில் நேற்றிலிருந்து மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Views: - 7

0

0