எனக்கு கல்லறை தயார் பண்றாங்க… கர்நாடகாவில் மக்கள் மத்தியில் உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!!

Author: Udayachandran RadhaKrishnan
12 March 2023, 4:22 pm
Modi speech - Updatenews360
Quick Share

பிரதமர் மோடி இன்று கர்நாடகா சென்றுள்ளார். மாண்டியா மாவட்டம் சென்ற அவர் பெங்களூரு-நடிஹ்ஹடா-மைசூரூ இடையேயான 118 கிலோமீட்டர் தூரத்திற்கான 6 வழிச்சாலையை திறந்துவைத்தார்.

இந்த சாலை திட்டத்தின் மதிப்பு 8 ஆயிரத்து 480 கோடி ரூபாய் ஆகும். மேலும், பல்வேறு திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உங்களின் அன்பிற்கு இரட்டை எஞ்சின் அரசு மாநில வளர்ச்சியை திருப்பி அளிக்கிறது.

கடந்த சில நாட்களாக மக்கள் எக்ஸ்பிரஸ் சாலை குறித்து பேசுகின்றனர். எக்ஸ்பிரஸ் சாலையின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த திட்டத்தால் நாட்டு இளைஞர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மோடிக்கு கல்லறை தோண்டுவேண்டுமென காங்கிரஸ் கனவு காண்கிறது. மோடிக்கும், பாஜகவுக்கும் கல்லறை தோண்டுவதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது.

ஆனால், பெங்களூரு-மைசூரூ நெடுஞ்சாலை அமைப்பதில் மோடி தீவிரமாக இருந்தேன். மோடி எளிய மக்களின் வாழ்க்கையை உயர்த்திக்கொண்டிருக்கிறேன்.

மக்களின் நம்பிக்கையே எனது கேடையம். கர்நாடகாவை வளர்ச்சியடையவைப்பதில் நான் தீவிரமாக உள்ளேன். எளிய மக்களுக்கான பணத்தை காங்கிரஸ் கொள்ளையடித்துக்கொண்டிருந்தது’ என்றார்.

Views: - 69

0

0