குடியரசுத் தலைவர் அளித்த தேநீர் விருந்து : பிரதமர் மோடி, எகிப்து அதிபர் பங்கேற்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
26 January 2023, 8:10 pm
President Tea - Updatenews360
Quick Share

இந்தியாவின் 74-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் ஜனாதிபதியும், மாநிலங்களில் கவர்னரும் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.

மாநில கவர்னர்கள் அளிக்கும் தேநீர் விருந்துகளில் அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அளித்த தேநீர் விருந்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

மேலும் குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக இந்தியாவிற்கு வருகை தந்துள்ள எகிப்து அதிபர் அப்தெல் பட்டா, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரும் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர்.

Views: - 110

0

0