தாயை பழிவாங்க மூன்று மாத குழந்தையை உயிருடன் எரித்துக் கொன்ற பெண்..! பஞ்சாபில் கொடூரம்..!

18 April 2021, 3:35 pm
Crime_UpdateNews360
Quick Share

பஞ்சாபில் மூன்று மாத பெண் குழந்தையை அவரது சித்தி ஒருவர் பழிவாங்குவதற்காக, உயிரோடு குழந்தையை எரித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாபின் பாசில்கா மாவட்டத்தில் உள்ள அமீர் காஸ் பகுதியில், அமன்தீப் கவுர் தனது மூன்று மாத பெண் குழந்தையை தனது பக்கத்து வீட்டில் விட்டுவிட்டு, சில வேலைகளுக்காக வங்கிக்குச் சென்றார். அவர் திரும்பி வந்தபோது, ​​மகளை காணவில்லை. 

அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் காணாமல் போன குழந்தையைத் தேடினார்கள். ஆனால் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை காலை, அவரது கணவரின் சகோதரரின் மனைவி, சுக்பிரீத் கவுர் எனும் பெண், கழிவறையின் செப்டிக் டேங்கில் குழந்தையின் கால்களைப் பார்த்ததாக அவரிடம் கூறினார். இதைத் தொடர்ந்து, குழந்தையின் உடல் செப்டிக் டேங்கிலிருந்து மீட்கப்பட்டது.

முதலில் குடும்பத்தினர் குழந்தையைத் தேடும்போது, செப்டிக் டேங்கில் காணாத நிலையில், சுக்பிரீத் குழந்தை செப்டிக் டேங்கில் இருப்பதாகக் கூறியதை அடுத்து குடும்ப உறுப்பினர்கள் சந்தேகம் அடைந்தனர். 

இதையடுத்து, குழந்தையை கொன்றார் என்ற சந்தேகத்தின் பேரில் சுக்பிரீத் மீது அமன்தீப் போலீசில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, போலீசார் சுக்பிரீத்தை அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது, ​​கைக்குழந்தையை உயிருடன் எரித்துக் கொன்றதை ஒப்புக்கொண்டார். 
குடும்பத் தகராறு தொடர்பாக குழந்தையின் தாயை பழிவாங்குவதற்காக தான் இந்தக் குற்றத்தைச் செய்ததாக அவர் போலீசாரிடம் கூறினார்.

இந்நிலையில் எரித்துக் கொல்லப்பட்ட குழந்தையின் தாய், “நான் இல்லாததைப் பயன்படுத்தி, என் கணவரின் தம்பியின் மனைவியான சுக்பிரீத், பக்கத்து வீட்டிலிருந்து குழந்தை பெற்றுவர என் மகனை அனுப்பி, பின்னர் குழந்தையை எரித்துக் கொன்று கழிவறையின் செப்டிக் டேங்கில் போட்டுள்ளார்.” எனக் கூறினார்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 302’வது பிரிவின் கீழ் சுக்பிரீத் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணை நடந்து வருகிறது.

Views: - 54

0

0