சையது மோடி தொடரை கைப்பற்றினார் பி.வி.சிந்து: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் வாழ்த்து..!!

Author: Rajesh
23 January 2022, 5:59 pm
Quick Share

சையது மோடி 2022 தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி. சிந்து மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்ற மாளவிகா இருவருக்கும் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தின் லக்னோ நகரில் நடைபெற்ற சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டியின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் பி.வி. சிந்து மற்றும் மாளவிகா பன்சோட் இருவரும் மோதினர்.

இந்த போட்டியில் மாளவிகாவை வீழ்த்தி பி.வி. சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். மேலும் மாளவிகா வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்நிலையில், ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், சாம்பியன் பட்டம் வென்ற பி.வி. சிந்து மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்ற மாளவிகா இருவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, ”சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி. சிந்து அவர்களுக்கும், மிகச்சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டி வரை சென்று வெள்ளிப் பதக்கம் வென்ற எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மாணவி மாளவிகா பன்சோட் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Views: - 2105

0

0