குடியரசு தின அணிவகுப்பில் ரஃபேல் போர் விமானங்கள்..! சாகசக் காட்சிகளுக்குத் தயாராகும் இந்திய விமானப்படை..!
18 January 2021, 9:19 pmஇந்திய விமானப்படையில் புதிதாக சேர்க்கப்பட்ட ரஃபேல் போர் விமானம், ஜனவரி 26’ஆம் தேதி இந்தியாவின் குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற வெளியாகியுள்ளது.
பிரான்சின் டஸ்ஸால்ட் ஏவியேஷன்ஸ் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க இந்தியா முடிவு செய்தது. முதற்கட்டமாக 2020 ஜூலை இறுதியில் 5 ரஃபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்து, அவை 2020 செப்டம்பரில் முறையாக இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டன.
இதையடுத்து நவம்பர் 2020’இல் மேலும் மூன்று ரஃபேல் போர் விமானங்களை இந்தியா பெற்றுள்ளது. இதன் மூலம் தற்போது இந்தியாவுடன் மொத்தம் 8 அதிநவீன ரஃபேல் போர் விமானங்கள் உள்ளன.
இந்நிலையில், குடியரசு தின அணிவகுப்பில், இந்திய பாதுகாப்புப் படைகள் தங்கள் வீரதீரச் செயலை வெளிப்படுத்துவதோடு, ஆயுதங்களையும் காட்சிப்படுத்துவது வழக்கம். இந்த வகையில், தற்போது ரஃபேல் போர் விமானங்களையும் காட்சிப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செங்குத்து சார்லி உருவாக்கத்தை மேற்கொள்வதன் மூலம் ஃப்ளை பாஸ்டை முடிக்கும் என்று இந்திய விமானப்படை இன்று தெரிவித்துள்ளது.
செங்குத்து சார்லி உருவாக்கத்தில், விமானம் குறைந்த உயரத்தில் பறந்து, சடாரென செங்குத்தாக மேலே எழுந்து சுழன்று கொண்டே சென்று அதிக உயரத்தில் நிலைபெறும் சாகச நிகழ்ச்சியாகும்.
“ஃப்ளை பாஸ்ட் ஒரு ரஃபேல் விமானத்துடன் செங்குத்து சார்லி உருவாக்கம் மூலம் முடிவடையும் என்று விங் கமாண்டர் இந்திரனில் நந்தி கூறினார்.
ஜனவரி 26’ஆம் தேதி மொத்தம் 38 ஐஏஎஃப் விமானங்களும், இந்திய ராணுவத்தின் நான்கு விமானங்களும் ஃப்ளை பாஸ்டில் பங்கேற்கின்றன என அவர் மேலும் கூறினார்.
0
0