‘மீனவர்களும் கடல் விவசாயிகள் தான்’: கொல்லத்தில் மீனவர்கள் மத்தியில் ராகுல் காந்தி உரை…!!

24 February 2021, 5:23 pm
raghul speech - updatenews360
Quick Share

திருவனந்தபுரம்: விவசாயிகள் நிலத்தில் செய்யும் பணியை தான், மீனவர்களும் கடலில் செய்கின்றனர் என கொல்லத்தில் மீனவர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் எப்படி நிலத்தை உழுது பயிரிட்டு மக்களுக்கு உதவுகின்றனரோ அதை போலத்தான் கடலில் அந்த பணியை மீனவர்கள் செய்வதாக கொல்லத்தில் மீனவர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு மத்திய அரசில் தனி அமைச்சகம் உள்ளது. ஆனால் மீனவர்களுக்கு அது இல்லை என்று சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி , மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது, மீனவர்களுக்கு என தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அப்போது தான் மீனவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன், அவர்கள் பிரச்சனைகளில் சிக்கும் போது பாதுகாக்க முடியும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Views: - 1

0

0