ஓய்வு பெற்ற தலைமை அர்ச்சகரை மீண்டும் பணியமர்த்தப்பட்டது தவறு : ஆந்திர முன்னாள் முதலமைச்சர் கருத்து!!
8 April 2021, 12:51 pmஆந்திரா : ஏழுமலையான் கோவிலில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை அர்ச்சகரை மீண்டும் பணியமர்த்தியது சரியல்ல என தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
திருப்பதி பாராளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் இம் மாதம் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இடைத்தேர்தல் களத்தில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம், காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியில் உள்ளனர்.
இந்நிலையில் தெலுங்குதேசம் கட்சி வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக இன்று திருப்பதிக்கு வந்த அக்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, திருப்பதி மலைக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டார். சாமி கும்பிட்ட பின் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சந்திரபாபு நாயுடு, வயது மூப்பு காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்ட தலைமை அர்ச்சகரை மீண்டும் பணியில் சேர்த்துக்கொண்டது தவறான முன்னுதாரணமாகும்.
முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை அவர் மகாவிஷ்ணு உடன் ஒப்பிட்டு பேசி இருக்கிறார். இங்கு வேலை செய்யும் சிலர் தங்களை தெய்வங்கள் போல் கருதி கொண்டுள்ளனர். அவர்கள் நாம் மனிதர்கள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று அப்போது குறிப்பிட்டார்.
0
0