நிதிக்குழு பரிந்துரைப்படி தமிழகத்துக்கு ரூ.355 கோடி நிதி ஒதுக்கீடு…! மத்திய அரசு அறிவிப்பு

11 August 2020, 8:56 pm
nirmala_sitharmaan_updatenews360
Quick Share

டெல்லி:  நிதிக்குழு பரிந்துரைப்படி தமிழகத்துக்கு ரூ.355 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழகம் உள்பட மொத்தம் 14 மாநிலங்களுக்கு ரூ.6,196 கோடியை மத்திய அரசானது ஒதுக்கி இருக்கிறது. மாநிலங்களில் நிலவி வரும் வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க மானியமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.

கொரோனா நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசின் இந்த நிதி பங்கீடு உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் விவரித்துள்ளார்.

மொத்தம் 14 மாநிலங்களுக்கு இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு 2020ம் காலத்தில் மாநிலங்களுக்கு 42 சதவீதம் வரிப் பகிர்வு இருந்தது. ஆனால் ஒரு சதவீதம் குறைக்கப்பட்டு, இந்த ஆண்டு வரிப் பகிர்வு 41 சதவீதமாக இருக்கிறது.

மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்கு வழங்கப்படும் நிதி ஒரு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு சதவீதம் வரியானது, புதியதாக பிரிக்கப்பட்டு உள்ள யூனியன் பிரதேசங்களான ஜம்மு – காஷ்மீர், லடாக் ஆகிய பிரதேசங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 3

0

0