சுதேசி என்றால் வெளிநாட்டுப் பொருட்களை புறக்கணிப்பதாக அர்த்தமல்ல..! ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அதிரடி..!

13 August 2020, 10:39 am
rss_chief_mohan_bhagwat_updatenews360
Quick Share

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத், ஆத்மநிர்பார் பாரத் அபியான் குறித்து பேசியபோது, சுதேசி என்பது வெளிநாட்டு பொருட்களை புறக்கணிப்பதை அர்த்தப்படுத்துவதில்லை என்று கூறியுள்ளார்.

மூன்றாவது மாதிரியான வளர்ச்சியின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி சுயசார்பு கொண்ட இந்தியா பற்றி இந்த அடிப்படையிலேயே பேசினார் என தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் ராஜேந்திர குப்தா எழுதிய இரண்டு புத்தகங்களை நேற்று வெளியிட்டபோது, ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதேசி அபியான் மற்றும் வெளிநாட்டு பொருட்களை புறக்கணிப்பது குறித்தும் பேசினார். சுதேஷி என்பது வெளிநாட்டுப் பொருட்களைப் புறக்கணிப்பதைக் குறிக்காது என்று அவர் தெளிவாகக் கூறினார். ஆனால் அவற்றை நம் சொந்த விதிமுறைகளின்படி வாங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

கொரோனா காலங்களில் புதிய வளர்ச்சி மாதிரியையும் அவர் வலியுறுத்தினார். சுதந்திரத்திற்குப் பிறகு தேவைப்படும் பொருளாதாரக் கொள்கைகள் வரைவு செய்யப்படவில்லை என்று கூறிய அவர், நாடு விரைவில் மேற்கத்திய மாதிரியை ஏற்றுக்கொண்டது என்றார்.

எனினும், இப்போது இந்த திசையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளில் அவர் திருப்தி தெரிவித்தார்.

பகவத் கூறுகையில், ஒரு மாதிரியில் மனிதனுக்கு சக்தி இருக்கிறது என்று கூறப்பட்டது, மற்றொன்றில் சமுதாயத்திற்கு சக்தி இருக்கிறது என்று கூறப்பட்டது. உலகம் உலகளாவிய சந்தையாக மாற வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

ஆனால் இப்போது கொரோனா காரணமாக புதிய சூழ்நிலைகளில், மதிப்புகளை அடிப்படையாகக் கொண்ட மூன்றாவது மாதிரியின் தேவை உள்ளது என அவர் மேலும் கூறினார்.