நடனக்கூடமாக மாறிய பள்ளிக்கூடம் : வகுப்பறையில் குத்தாட்டம் போட்ட ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 September 2021, 10:36 am
Uttarpradesh Teachers Dance -Updatenews360
Quick Share

உத்தரபிரதேசம் : வகுப்பறையில் ஆசிரியைகள் 5 பேர் குத்தாட்டம் போட்டு நடனமாடிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் 5 ஆசிரியர்கள் மாணவர்கள் இல்லாத வகுப்பறையில் சினிமா பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளானது.

இந்நிலையில் இதுகுறித்து உத்தரபிரதேச கல்வித்துறை விளக்கம் அளிக்க கோரி டான்ஸ் ஆடிய 4 ஆசிரியர்கள் மற்றும் அப்பள்ளி தலைமை ஆசிரியருக்கும் உத்தரவிட்டது.

இதில் அவர்கள் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததால் நெறிகளை மீறிய செயல் என ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Views: - 288

2

1