நாளை முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு!

Author: kavin kumar
15 August 2021, 11:23 pm
Punjab School Reopen - Updatenews360
Quick Share

ஆந்திர மாநிலத்தில் நாளை முதல் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதை அடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாணவர்களின் நலன் கருதி மாநில அரசுகள் பள்ளிகளைத் திறந்து வருகின்றன.இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும், 50 சதவீத மாணவர்களுடன் வகுப்புகளை நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மீதமுள்ள 50 சதவீத மாணவர்களை ஆன்லைன் மூலம் பங்கேற்கஅறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள், சீருடைகளை தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

Views: - 336

3

0