அடர்ந்த வனப்பகுதிக்குள் மாயமான சிறுவன் : மாடு மேய்க்க தந்தையுடன் சென்ற போது விபரீதம்… ட்ரோன் உதவியுடன் தேடுதல் வேட்டை!!

7 July 2021, 4:38 pm
Boy Missing- Updatenews360
Quick Share

ஆந்திரா : மாடு மேய்க்க தந்தையுடன் சென்ற நான்கு வயது சிறுவன் அடர்ந்த வனப்பகுதியில் மாயமானதால் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள உய்யாளப்பள்ளி கிராமத்தை சேர்ந்த போகய்யா, வரலட்சுமி ஆகியோரின் மகன் சஞ்சு. நான்கு வயது சிறுவனான சஞ்சு கடந்த 30ஆம் தேதி மாடு மேய்ப்பதற்காக சென்ற தனது தந்தையுடன் வனப்பகுதிக்கு சென்றான்.

தந்தையுடன் இருந்த சஞ்சய் திடீரென்று வனப்பகுதியில் மாயமாகி விட்டான். அடர்ந்த வனப் பகுதிக்குள் சென்ற சிறுவனை அதன்பின் காணவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆகியோர் தீவிரமாக வனப்பகுதி முழுவதும் தேடிப்பார்த்தும் அவன் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் போலீசாருக்கு சஞ்சயின் பெற்றோர் புகார் அளித்தனர். அடர்ந்த வனப்பகுதியில் சிறுவன் காணாமல் போன நிலையில் அவனை தேடி கண்டுபிடிப்பது பெரும் சவாலான பணியாக உள்ளது.

எனவே நூற்றுக்கும் மேற்பட்ட நேரடியாகவும் போலீஸ் அதிகாரிகள் ட்ரோன் கேமரா மற்றும் மோப்ப நாய்கள் ஆகியவற்றின் உதவியுடன் வனப்பகுதியில் மாயமான சிறுவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Views: - 155

0

0