பாலியல் துன்புறுத்தலால் விரக்தி..! 15 வயது சிறுமி தற்கொலைக்கு முயற்சி..!

20 November 2020, 11:12 am
Minor_Girl_GangRape_UpdateNews360
Quick Share

உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் நேற்று இரண்டு ஆண்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 15 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய இழுத்துச் செல்ல முயன்ற அவர்களிடமிருந்து சிறுமி எப்படியோ தப்பித்து வீடு திரும்பிய நிலையில், தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் மைனர் என்றும் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வட்ட அலுவலர் நம்ரதா ஸ்ரீவஸ்தவ் தெரிவித்தார். சிறுமி தனது கிராமத்தில் ஒரு அடி பம்பிலிருந்து தண்ணீர் எடுக்கச் சென்றபோது, இருவரும் அங்கு வந்து பாலியல் துன்புறுத்தலை மேற்கொண்டதாக ஸ்ரீவஸ்தவ் கூறினார்.

சிறுமி விஷம் உட்கொண்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த நான்கு நாட்களில் இது போன்ற மூன்றாவது சம்பவம் இதுவாகும். தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று நபர்களுக்கு எதிராக போலீஸ் செயல்படாத விரக்தியில், ஒரு சட்ட மாணவி திங்களன்று புலந்த்ஷாரின் அனூப்ஷஹரில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை வழக்கைத் திரும்பப் பெற அவரது குடும்பத்தினர் மறுத்ததையடுத்து, பாலியல் பலாத்கார குற்றச்சாட்டின் குடும்ப உறுப்பினர்கள் ஜஹாங்கிராபாத்தில் பதின்வயது சிறுமியை தீ வைத்த மற்றொரு சம்பவமும் நிகழ்ந்துள்ள நிலையில், தற்போது இந்த சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு இந்த விவகாரத்தில் அதீத கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கைக்கு வழிவகுக்கு வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Views: - 0

0

0