அரசியல் ஒத்துவரவில்லை..! மீண்டும் சிவில் சர்வீஸ் பணிக்கே திரும்பும் ஷா பைசல்..? ஜம்மு காஷ்மீரில் புதிய திருப்பம்..!

10 August 2020, 1:19 pm
Shah_Faesal_Former_IAS_kashmir_UpdateNews360
Quick Share

ஜம்மு காஷ்மீரில் அரசியல்வாதியாக மாறிய, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷா பைசலின் ராஜினாமா இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்ட பின்னர், அவர் மீண்டும் நிர்வாகத்தில் சேர வாய்ப்புள்ளது என்று உயர் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

சுவாரஸ்யமாக, பைசல் தனது ராஜினாமாவை சமர்ப்பித்து ஜம்மு-காஷ்மீர் மக்கள் இயக்கம் (ஜே.கே.பி.எம்) என்ற அரசியல் கட்சியை அமைத்த போதிலும், அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஜம்மு காஷ்மீர் கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கப்படவில்லை.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து அரசியல் பயோ’வை நீக்கியதன் மூலம் அவர் மீண்டும் பணியில் சேர வாய்ப்புள்ளது என்ற செய்தி அறிக்கைகளுக்கு பைசல் உயிரூட்டியுள்ளார்.

அவரது ட்விட்டர் பயோ, நேற்று மாலை, “எட்வர்ட் எஸ் ஃபெலோ @ ஹார்வர்ட் பல்கலைக்கழகம், மெடிகோ. ஃபுல்பிரைட், மையவாதி” என்று மாற்றப்பட்டுள்ளது. ஜே.கே.பி.எம் நிறுவனர் என்ற முறையில் தனது அரசியல் பயோவை அவர் நீக்கியுள்ளார்.

2010 சிவில் சர்வீசஸ் தேர்வில் முதலிடம் பிடித்த ஷா பைசலுக்கு சொந்த மாநிலத்திலேயே ஐ.ஏ.எஸ். பதவி வழங்கப்பட்டது.

நேர்மையான அதிகாரியாக அறியப்பட்ட பைசலின் நலம் விரும்பிகள், 2018’ல் அரசியலில் சேர ராஜினாமா செய்தபோது, அரசியல் அவருக்கு உகந்ததாக இருக்காது என்று எச்சரித்தனர்.

ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கான மாற்று அரசியல் தளத்தின் மிகுந்த ஆரவாரம் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அவர் 2019’ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜே.கே.பி.எம். எனும் கட்சியைச் தொடங்கினார். ஆனால் அது தனக்கு ஒத்துவராததால் மீண்டும் சிவில் சர்வீஸ் பணிக்கே திரும்ப விரும்புவதாக கூறப்படுகிறது.

Views: - 4

0

0