தப்ப தடுக்க வேண்டிய போலீசே இப்படி பண்ணலாமா? அதிவேகமாக சென்ற போலீஸ் வாகனம் மோதி பைக்கில் சென்றவர் தூக்கி வீசிய ஷாக் காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
19 August 2022, 1:45 pm

போலீஸ் வாகனம் மோதி பைக்கில் சென்ற இளைஞர் தூக்கி வீசப்பட்ட பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள தேவரகொண்டா அருகே வேகமாக சென்று கொண்டிருந்த தேவரகொண்டா டிஎஸ்பியின் வாகனம் மோதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞர் படுகாயம் அடைந்தார்.

இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது தேவர கொண்ட அருகே வளைவு ஒன்றில் வேகமாக திரும்பிய போலீஸ் டிஎஸ்பி யின் வாகனம் அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த இளைஞர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். படுகாயமடைந்த அந்த இளைஞரை டிஎஸ்பி தன்னுடைய வாகனத்தின் டிக்கியில் படுக்க வைத்து தேவர்கொண்டா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?