SSLV D1 ராக்கெட் மிஷன் தோல்வி : விளக்கம் கொடுத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தது இஸ்ரோ!!

Author: Udayachandran RadhaKrishnan
7 August 2022, 3:39 pm
ISRO Explains - Updatenews360
Quick Share

எஸ்.எஸ்.எல்.வி டி1 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட 2 செயற்கைக்கோள்களும் செயலிழந்து விட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

எஸ்.எஸ்.எல்.வி டி1 சிறிய ரக ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட 2 செயற்கைக்கோள்களும் செயலிழந்து விட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
எஸ்.எஸ்.எல்.வி டி1 ராக்கெட்டில் ஏவிய இஓஎஸ்-02, ஆசாதி சாட் செயற்கைக் கோள்களை விண்ணில் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதனால் இந்த 2 செயற்கைக்கோள்களையும் பயன்படுத்த இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.வி டி1 ராக்கெட்டிலிருந்து முன்னரே செயற்கைக்கோள்கள் வெளியேறியதால் நிலைநிறுத்த முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கைக்கோள்கள் வட்டப்பாதைக்கு பதிலாக நீள் வட்டப்பாதையில் நிறுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. நீள் வட்டப்பாதையில் நிறுத்தப்பட்டுள்ள செயற்கைக்கோள்களை மேற்கொண்டு பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 572

0

0