கண்ணாடியால் மூடப்பட்ட கேலரி; மனைவிக்கு முத்தம் கொடுத்த சூர்யா! வைரல் புகைப்படம்

2 May 2021, 3:41 pm
Quick Share

பலோ பபுளில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் வீரர் சூர்ய குமார் யாதவ், கண்ணாடி கேலரிக்கு அந்தப் பக்கமாக நிற்கும் தன் மனைவிக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் அதிக முறை கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை பெற்றிருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. நடப்பு சாம்பியனாக வலம் வரும் மும்பை அணி, மிடில் ஆர்டர் சொதப்பலால், தற்போது புள்ளிப்பட்டியலில் நான்காவது இடம் பிடித்திருக்கிறது. முதலில் எப்போதும் அந்த அணி இதுபோல் ஆரம்பித்து பின் பிளே ஆஃப்புக்குள் நுழைந்து விடும் என்பதால், போட்டிகள் போக போக சுவாரஸ்யத்திற்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கும்.

இந்நிலையில் கடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடந்த லீக் போட்டியில், அசத்தலாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயித்த 172 ரன் இலக்கை, 18.3 ஓவரில் அடைந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் தனது மனைவிக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால், ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் வீரர்கள் அனைவரும் பயோ பபுளில் பாதுகாப்புடன் இருக்கின்றனர். ஐபிஎல் போட்டிகள் முடியும் வரை, அவர்கள் தங்கள் குடும்பத்தினரை சந்திக்க இயலாத சூழல் உள்ளது. இந்நிலையில், பயோ பபுளில் இருக்கும் சூர்ய குமார் யாதவ், தனது மனைவி தேவிஷா ஷெட்டியிடம் பேசினார். அப்போது தேவிஷா கண்ணாடி அறைக்குள் இருந்தார். அறைக்கு வெளியே இருந்த சூர்யகுமார் யாதவ், கண்ணாடியில் முகம் பதித்த தனது மனைவிக்கு அன்பாக முத்தம் இட்டார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி உள்ளது.

Views: - 91

0

0

Leave a Reply