கசாப்புக் கத்தியால் மகள்களைக் கொள்ள முயன்ற போதை ஆசாமி..! வீட்டிற்குள் குதித்து மீட்ட போலீஸ்..!

8 November 2020, 10:21 am
arrest_updatenews360
Quick Share

தெலுங்கானாவின் சித்திப்பேட்டை மாவட்டத்தில், கசாப்புக்கடை வைத்திருக்கும் நபர், குடிபோதையில் தனது இரண்டு மகள்களையும் கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் சித்திப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிட்டாபூர் கிராமத்தில் நடந்தது. உள்ளூர் போலீசார் சரியான நேரத்தில் வந்து, குடிகார தந்தையைக் கைது செய்து இரண்டு சிறுமிகளையும் காப்பாற்றினர்.

வெட்டுக் காயங்களுக்கு ஆளான 8 வயது ஹம்சரின் மற்றும் 5 வயது அலினா ஆகிய இருவரையும் பின்னர் போலீசார் சிகிச்சைக்காக மருத்துவனமையில் அனுமதித்துள்ளனர்.

நிஜாம் முகமது என அடையாளம் காணப்பட்ட தந்தை அலினாவின் தலைமுடியிலிருந்து பிடித்து தொண்டையை அறுக்க முயன்றுள்ளார். இதை தடுக்க முயன்ற ஹம்சரினுக்கு லேசான குத்து காயம் ஏற்பட்டது.

“கடந்த சில நாட்களாக நிஜாம் தனது குடும்பத்தினரை துன்புறுத்தி வந்துள்ளார் மற்றும் வீட்டில் கசாப்புக் கத்தியை வைத்து மிரட்டுவது குறித்து ஒரு உள்ளூர்வாசி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்” என்று பூம்பள்ளி துணை ஆய்வாளர் ஜமால் தெரிவித்தார்.

போலீசார் குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டை அடைந்ததும், அவர் தன்னை உள்ளே பூட்டிக் கொண்டு கதவுகளைத் திறக்க மறுத்துவிட்டார். ஒரு கான்ஸ்டபிள் அஸ்பெஸ்டாஸால் செய்யப்பட்ட வீட்டின் கூரைக்குச் சென்றார். மற்றொருவர் கதவைத் திறக்க முயன்றார்.

அஸ்பெஸ்டாஸ் தாள்கள் பலவீனமாக இருந்ததால் கூரையில் நின்ற கான்ஸ்டபிள் நேரடியாக வீட்டிற்குள் விழுந்தார். அப்போது குற்றம் சாட்டப்பட்டவர் ஏற்கனவே தனது மகள்களின் தொண்டையை அறுக்கத் தொடங்கியிருப்பதை கான்ஸ்டபிள் கண்டுபிடித்தார்.

போலீஸ்காரர்களைப் பார்த்ததும், குற்றம் சாட்டப்பட்டவர் அவர்களை வெட்டி விடுவதாக அச்சுறுத்தியுள்ளார். கான்ஸ்டபிள் அவரது அருகில் சென்றபோது, குற்றம் சாட்டப்பட்டவர் அவரைத் தாக்கினார்.

பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் லாவகமாக பிடிக்கப்பட்டு இரண்டு சிறுமிகளும் மீட்கப்பட்டனர். “குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து குடித்து வந்தார் மற்றும் அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.

நிஜாமின் மனைவியும் மகனும், சம்பவம் நடந்தபோது வீட்டில் இல்லை. இதையடுத்து தந்தை காவலில் வைக்கப்பட்டுள்ளார் மற்றும் அவர் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

Views: - 21

0

0