கணவனை செருப்பால் அடித்து காவல்நிலையம் அழைத்து வந்த மனைவி!!

3 September 2020, 12:02 pm
Telangana Issue - Updatenews360
Quick Share

தெலுங்கானா : மனைவியை சித்திரவதை செய்து பிறந்த வீட்டுக்கு துரத்திவிட்டு மேலும் 3 இளம் பெண்களை ஆசை வார்த்தை கூறி வலையில் வீழ்த்திய காமுகனுக்கு தர்ம அடி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் மனகோடூரு மண்டலத்திலுள்ள உட்டிக்கூறு கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பெத்தபள்ளி மாவட்டத்திலுள்ள சுல்தான்பாத் மண்டலத்தை சேர்ந்த சின்ன சின்னபொங்கூறு கிராமத்தில் வசிக்கும் கொண்டி சம்பத் என்பவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு குடும்பத்தினர் திருமணம் நடத்தி வைத்தனர்.

சில காலம் அந்தப் பெண்ணுடன் குடும்பம் நடத்திய சம்பத் அதன்பின் அந்தப் பெண்ணை அடித்து துன்புறுத்தி பிறந்த வீட்டுக்கு அனுப்பிவிட்டார். இந்தநிலையில் கரீம்நகரில் ஒரு ஷாப்பிங் மாலில் வேலை செய்துவந்த சம்பத் அங்கு உடன் வேலை செய்யும் இளம்பெண்ணை தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தி ரகசியமாக திருமணம் செய்து கரீம் நகரில் வீடு ஒன்றை வாடகைக்கு பிடித்து குடும்பம் நடத்தினார்.

இது பற்றிய தகவல் அறிந்த சம்பத்தின் முதல் மனைவி, அவருடைய பெற்றோர்கள் ஆகியோர் அங்கு சென்று அவரை கோபம் தீரும் வரை அடித்து கயிற்றால் கட்டி வீட்டுக்கு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து கரீம்நகர் முதலாவது நகர காவல் நிலையம் வரை அடித்து இழுத்து சென்று போலீசில் ஒப்படைத்தனர்.

சம்பத்திடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் இதுபோல் மனைவி உட்பட 4 பெண்களை திருமணம் என்ற பெயரில் தன்னுடைய வலையில் வீழ்த்தியது தெரியவந்தது. குறிப்பாக படித்துவிட்டு வறுமை காரணமாக வேலைக்கு செல்லும் ஏழை வீட்டு பெண்களை குறிவைத்து இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக சம்பத் மனைவி மற்றும் அவரிடம் ஏமாந்த 3 பெண்கள் ஆகியோர் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கரீம் நகர் போலீசார் சம்பத்தை கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனர்.

Views: - 0

0

0