பாகிஸ்தான் இலக்கிய விழாவில் இந்தியாவை விமர்சித்த காங்கிரஸ் எம்பி..! பாஜக கடும் கண்டனம்..!

18 October 2020, 1:55 pm
Sasi_Tharoor_UpdateNews360
Quick Share

லாகூர் இலக்கிய விழாவில் பேசிய காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூர், கொரோனா தொற்றுநோயை இந்தியா கையாளுவது குறித்து கேள்வி எழுப்பினார்.

தனது மெய்நிகர் உரையில் இந்தியாவை கேலி செய்த தரூர், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் இந்தியப் பயணம் முதல் தப்லிக் ஜமாத் என பல பிரச்சினைகளை எழுப்பினார் மற்றும் ராகுல் காந்திக்கு இந்த தொற்றுநோய் குறித்து மோடி அரசாங்கத்தை எச்சரித்த போதும், பிரதமர் செயல்படத் தவறிவிட்டார் என இலக்கியம் தொடர்பாக நடந்த கூட்டத்தில் இந்திய அரசியலைப் பேசியுள்ளார்.

“இந்திய அரசாங்கம் சிறப்பாக செயல்படவில்லை. மக்கள் இதை உணர்கிறார்கள். கொரோனா தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று பிப்ரவரி மாதத்திலேயே ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். இல்லையெனில் இந்தியா பொருளாதார பேரழிவை எதிர்கொள்ளும் எனவும் எச்சரித்திருந்தார். பேரழிவை முன்னறிவித்த அவருக்கு அனைவரும் கடன் பட்டுள்ளோம்” என்று தரூர் கூறினார்.

“இந்தியாவில் ஒரு தொற்றுநோய் காரணமாக எழும் மதவெறிக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். முஸ்லிம்களுக்கு எதிரான வெளிப்படையான மதவெறி மற்றும் பாகுபாட்டை நியாயப்படுத்த தப்லிக் ஜமாத் சூப்பர்-ஸ்ப்ரெடர் நிகழ்வு பயன்படுத்தப்பட்டது” என்று தரூர் கூறினார்.

தரூரின் கூற்றுகளுக்கு பதிலளித்த பாஜக, திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர் மீது, பாகிஸ்தான் அரங்கில் இந்தியாவை அவதூறு செய்ததற்காக கடும் தாக்குதலை நடத்தியது.

பாகிஸ்தானின் மீதான பாசத்திற்காக காங்கிரஸை விமர்சித்த பாஜக, “தன்னை ஒரு புத்திஜீவி என்று அழைக்கும் ஒருவர் ராகுல் காந்தியை நவீனகால நோஸ்ட்ராடாமஸ் என்று ஓவியம் வரைவதன் மூலம் அவர் சொன்னதைச் சொல்வது மிகவும் முட்டாள்தனமானது மற்றும் சிறுபிள்ளைத்தனமாகும்” என்று கூறியுள்ளது.

Leave a Reply