காரை ஓட்டிய ஓட்டுநருக்கு திடீர் மயக்கம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்த கார் : பதை பதைக்க வைக்கும் காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
8 February 2023, 1:20 pm

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று காலை காரை வேகமாக ஓட்டி சென்று கொண்டிருந்த உதய் என்பவருக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டது.

எனவே அவருடைய கட்டுப்பாட்டில் இருந்து விலகிய கார், மோட்டார் சைக்கிளை சாலையில் நிறுத்திவிட்டு பேசி கொண்டிருந்தவர்கள், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மற்றும் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் ஆகியவற்றின் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் இரண்டு பேர் படுகாயம் அடைந்த நிலையில் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு கார் ஆகியவை சேதமடைந்தன.

விபத்து பற்றிய தகவல் அறிந்து அங்கு வந்த விசாகப்பட்டினம் போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

https://vimeo.com/796904740

காரை ஓட்டி சென்று மயக்கம் அடைந்த உதய் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதை பதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?