‘என் மகள் முன்னாடி எதுக்கு என்னை அடிச்சீங்க’ : காவலருடன் வாக்குவாதம் செய்த தந்தை.. வைரலான வீடியோ.. பெருகும் ஆதரவு!!!

Author: Udayachandran RadhaKrishnan
7 December 2021, 6:58 pm
Police Slaps Video -Updatenews360
Quick Share

தெலுங்கானா : ஹெல்மெட் அணியாத நபரை மகள் கண்முன்னே எஸ்ஐ தாக்கிய சம்பத்தின் வீடியோ வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் என்பவர் நேற்று தனது 8 வயது மகளை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சந்தைக்கு சென்றார்.

அப்போது சப் இன்ஸ்பெக்டர் முனிருல்லாஹ் என்பவர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அந்த நேரத்தில் காய்கறிகளை வாங்கி திரும்பிய ஸ்ரீநிவாசை எஸ்.ஐ தடுத்து நிறுத்தி விசாரித்தார்.

அப்போது ஸ்ரீநிவாஸ் ஹெல்மெட் அணியாததால் எஸ்ஐ வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு ஸ்ரீநிவாஸ் தனது வீடு அருகில் தான் உள்ளது என்றும் காய்கறிகளை வாங்கிகொண்டு தனது மகளுடன் சென்று கொண்டிருப்பதாக கூறினார்.

ஆனால் விளக்கத்தை ஏற்காத எஸ்ஐ ஹெல்மெட் ஏன் போடவில்லை என ஸ்ட்ரிட்டாக குரலை உசத்தி கேட்க, ஸ்ரீநிவாஸ் மகள் பயந்துள்ளார். இதையடுத்து ஸ்ரீநிவாசும் பதிலுக்கு பதில் எஸ்ஐ-உடன் வாக்குவாதம் செய்தார்.

இதையடுத்து ஆத்திரமடைந்த எஸ்ஐ, மகளின் முன்வே ஸ்ரீநிவாசை ஓங்கி அறைந்துள்ளார். இதையடுத்து அந்த இடத்தில் மக்கள் கூட, தன்னை தாக்கிய எஸ்ஐயிடம் நான் ஹெல்மெட் போடவில்லை என்றால் அதற்கான அபராதத்தை விதியுங்கள் எதற்கு என் மகள் முன்பு என்னை அடித்தீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலுக்கு பதில் எஸ்ஐயும் பேச, வேடிக்கைப் பார்த்த மக்கள், எஸ்ஐக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு கூடுதலாக போலீசார் வரவழைக்ப்பட்டு கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்வலைகளையும், எஸ்ஐக்கு எதிராக கண்டனங்களையும் குவித்து வருகிறது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், எஸ்ஐயை ஸ்ரீநிவாஸ் ஆபாசமாக திட்டியதால்தான் பிரச்சனை பெரிதாகியுள்ளது என கூறினார். ஆனால் என்ன பிரச்சனை என்றாலும் கைவைத்திருக்க கூடாது, அதுவும் மகள் கண்முன்னே தந்தை அடிவாங்குவதை யாராலும் பொறுத்துக்கொள்ள முடியாது என ஸ்ரீநிவாசுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

Views: - 241

0

0