பிரபல பாடகரை தாக்கிய விவகாரம் : மன்னிப்பு கேட்ட ஆளுங்கட்சி எம்எல்ஏ!!!

Author: Udayachandran RadhaKrishnan
21 பிப்ரவரி 2023, 8:28 மணி
Shivsena - Updatenews360
Quick Share

இந்தியில் பல பாடல்களை பாடி இந்திய அளவில் பிரபலமான பாடகராக இருப்பவர் சோனு நிகம்.

மற்ற இந்திய மொழிகளான தமிழ், பெங்காலி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளிலும் பாடியுள்ளார். தமிழில் ஜீன்ஸ், கிரீடம், மதராசப்பட்டினம் உள்ளிட்ட படங்களில் சில பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையுடையவர்.

இவர் மும்பையில் உள்ள செம்பூர் பகுதியில் நேற்று இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். அதில் மேடையில் பாடிவிட்டு கீழே இறங்கியபோது ஸ்வப்னில் படேர்பேகர் மற்றும் அவரது நண்பர்கள் செல்ஃபி எடுக்க முயன்றனர்.

அப்போது சோனு நிகம் உதவியாளர்கள் ஸ்வப்னில் படேர்பேகரை தடுத்ததால் கோபமடைந்த அவர் சோனு நிகமின் உதவியாளர்களைத் தாக்கினார்.

ஸ்வப்னில் படேர்பேகர் சிவசேனா கட்சியின் எம்எல்ஏ பிரகாஷ் படேர்பேகரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அடிபட்ட சோனு நிகமின் உதவியாளர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து எம்எல்ஏ மகன் ஸ்வப்னில் படேர்பேகர் மீது பாடகர் சோனு நிகம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் எம்எல்ஏ மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.


இதைத் தொடர்ந்து எம்எல்ஏ பிரகாஷ் படேர்பேகர் தற்போது, என் மகன் செய்தது தவறுதான். அது தவறுதலாக நடந்துவிட்டது என மன்னிப்பு கோரியுள்ளார்.

  • Vijay TVK அவசர அழைப்பு விடுத்த தவெக.. விஜய் முக்கிய ஆலோசனை.. பரபரக்கும் களம்!
  • Views: - 424

    0

    0