நவம்பர் 7ம் தேதி முதல் 30ம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கலாமா? – மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு….!!

3 November 2020, 9:24 am
green trubual - updatenews360
Quick Share

நவம்பர் 7ம் தேதி முதல் 30ம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கலாமா என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி: வருகின்ற 14ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தில், ‘இந்தியன் சோஷியல் ரெஸ்பான்ஸ்பிலிடி நெட்வொர்க்’ என்ற அமைப்பு மனு ஒன்றினை தாக்கல் செய்தது.

அந்த மனுவில், ‘ கொரோனா காலத்தில், காற்றின் தரம் மோசமாக இருப்பதால், முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்க வேண்டும்’ என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை தேசிய பசுமை தீர்ப்பாயத்தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

விசாரணையின் போது, டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள், சுற்றுச்சூழல் நலனை கருத்தில் கொண்டு, வருகிற 7ம் தேதி முதல் 30ம் தேதி வரை பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கலாமா? என்பது குறித்து டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களின் தலைமைச்செயலாளர்கள், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம், டெல்லி போலீஸ் கமிஷனர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், வழக்கு விசாரணையை வருகிற 5ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Views: - 16

0

0