‘என் வண்டி மேலயே உரசரயா’ : ராங் ரூட்டில் வந்த பெண் அரசு பேருந்து ஓட்டுநரை கண்மூடித்தனமாக தாக்கி அடாவடி!!

Author: Udayachandran RadhaKrishnan
10 February 2022, 11:18 am
Woman Slap Driver - Updatenews360
Quick Share

ஆந்திரா : விஜயவாடா அருகே தவறான பாதையில் ஸ்கூட்டியில் வந்த பெண் மீது அரசு பேருந்து உரசி சென்ற நிலையில் பெண் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கி உதைத்த வீடியோ வைரலாகி வருகிறது.

விஜயவாடாவில் போக்குவரத்து விதிகளை மீறி ராங் ரூட்டில் ஸ்கூட்டியில் வந்த பெண் மீது எதிரில் வந்து கொண்டிருந்த அரசு பேருந்து லேசாக மோதி சிறிய அளவிலான விபத்து ஏற்பட்டது.

இதனால் ஆவேசம் அடைந்த அந்த பெண் பேருந்தில் ஏறி சுமார் அரை மணி நேரம் ஓட்டுனர் மீது சாமியாடி தீர்த்துவிட்டார். அப்போது பேருந்து ஓட்டுனரை தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்து, தாக்கி, உதைத்து தன்னுடைய வீரத்தை அவர் வெளிப்படுத்தினார்.

பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் உட்பட பலர் எடுத்துக்கூறியும் அவர் தன்னுடைய தாண்டவத்தை நிறுத்தவில்லை. இந்தநிலையில் தகவல் அறிந்து அங்கு போலீசார் வந்தனர்.

போலீசாரை பார்த்ததும் மேலும் தன்னுடைய குரலை உயர்த்தியவர் டிரைவரை காலால் உதைத்து, சட்டையை பிடித்து இழுத்து கீழே இறங்குடா என்று முன்னைவிட வேகமாக சப்தம் போட்டார்.

இந்த நிலையில் ஓட்டுனர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துகின்றனர்.

Views: - 477

0

0