கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கு குறித்து ஆலோசிக்கவில்லை: பசவராஜ் பொம்மை தகவல்..!!

Author: Aarthi Sivakumar
22 March 2021, 9:30 am
basavaraj boomai - updatenews360
Quick Share

தார்வார்: கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து இதுவரை அரசு ஆலோசிக்கவில்லை என அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை தார்வாரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ரமேஷ் ஜார்கிகோளி குறித்த ஆபாச சி.டி. பற்றி சிறப்பு விசாரணை குழு நேர்மையாக, வெளிப்படையாக, பாரபட்சமின்றி விசாரணை நடத்தி வருகிறது.

வெளிமாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனால் கர்நாடகத்திலும் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா பரவலை தடுக்க தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளை மூடுவது குறித்து கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை ஆகியவை கூடி பேசி ஆலோசித்து முடிவு எடுக்கும்.

கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து இதுவரை அரசு ஆலோசிக்கவில்லை. அதற்கு பதிலாக கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு இருக்கின்றன. மஸ்கி, பசவகல்யாண் மற்றும் பெலகாவி ஆகிய தொகுதிகளில் பா.ஜனதா கட்சி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் சாதனை வெற்றியை பெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 160

0

0