மீண்டும் மீண்டுமா..? திருப்பதியில் கூண்டில் சிக்கிய 5வது சிறுத்தை.. அதிர்ச்சியில் பக்தர்கள்..!!

Author: Babu Lakshmanan
7 September 2023, 10:01 am
Quick Share

திருப்பதியில் வனத்துறை வைத்த கூண்டில் 5வது சிறுத்தை சிக்கியிருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், வனப்பகுதியான அலிபிரி மற்றும் ஸ்ரீ வாரி மெட்டு நடைபாதை வழியாக சென்று தரிசனம் செய்து வருகின்றனர். அண்மையில், பெற்றோருடன் கோவிலுக்கு வந்த 6 வயது சிறுமியை இழுத்துச் சென்ற சிறுத்தை ஒன்று கடித்தே கொன்றது.

இதனையடுத்து, சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்த வனத்துறையினர், இரண்டு நடைபாதைகளில் உள்ள வனப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் கூண்டு அமைக்கப்பட்டது. இதுவரை கூண்டுகள் வைத்ததில் 4 சிறுத்தைகள் பிடிபட்டன. இந்த சிறுத்தைகள் திருப்பதி வன உயிரின பூங்காவில் விடப்பட்டன.

அச்சுறுத்தி வந்த சிறுத்தைகளை வனத்துறையினர் பிடித்து விட்டதால் பக்தர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த நிலையில், திருப்பதி நடைபாதையில் சுற்றி வந்த மேலும் ஒரு சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியுள்ளது. இந்த சிறுத்தையையும் அதனை உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைத்தனர். இதுவரை 5 சிறுத்தைகள், கூண்டு வைத்து பிடிக்கப்பட்டுள்ளன.

Views: - 236

0

0