திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாத விலை அதிரடி உயர்வு : ரூ.500 ஆக உயர்ந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி!!

3 July 2021, 12:22 pm
Prasatham Rate High- Updatenews360
Quick Share

ஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜிலேபி, முறுக்கு பிரசாத விலை அதிரடி உயர்வால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு வாரமும் வியாழன் அன்று நடத்தப்படும் திருப்பாவாடை சேவையில் ஜிலேபி, முறுக்கு ஆகியவை ஏழுமலையானுக்கு நைவேத்தியமாக சமர்ப்பிக்கப்படும்.

கட்டண சேவை ஆன திருப்பாவாடை சேவையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு ஒரு முறுக்கு, ஜிலேபி ஆகியவை பிரசாதமாக வழங்கப்படும். இதுதவிர முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்கள் அடிப்படையில் பக்தர்களுக்கும் முறுக்கு, ஜிலேபி பிரசாதத்தை தேவஸ்தானம் பணம் பெற்றுக் கொண்டு வழங்கும்.

இதுநாள் வரை 100 ரூபாய்க்கு ஒரு முறுக்கு, ஒரு ஜிலேபி ஆகியவை பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தேவஸ்தான அறங்காவலர் குழுவின் முடிவின் அடிப்படையில் ஒரு முறுக்கு ஒரு ஜிலேபி ஆகியவற்றின் விலை 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

Views: - 197

0

0