ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு ரூ1. கோடி பரிசு: முதலமைச்சர் பிரேன்சிங் அறிவிப்பு

Author: Udayaraman
24 July 2021, 11:28 pm
Quick Share

மணிப்பூர்: ஒலிம்பிக்கில் மகளிர் பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு ரூ.1 கோடி பரிசு என மணிப்பூர் முதலமைச்சர் பிரேன்சிங் அறிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கக் கணக்கைத் தொடங்கி வைத்தார் பளுத்தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு. 49 கிலோ எடைப்பிரிவில் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை புரிந்தார்.டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை வென்று தந்தார் மீராபாய் சானு. கரணம் மல்லேஸ்வரிக்குப் பிறகு ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் பிரிவில் பதக்கம் வென்ற 2வது வீரான்ஙனையானார் மீராபாய் சானு. சானு 87 கிலோ, 84 கிலோ எடையை வெற்றிகரமாகத் தூக்கினார். ஆனால் 89 கிலோ எடையை தூக்க முடியவில்லை. இதனையடுத்து வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. சீனாவின் ஹூ ஷிஹு 94 கிலோ எடை தூக்கி தங்கம் வென்றார். இது ஒலிம்பிக் வரலாற்றுச் சாதனையாகும்.

இந்தோனேசியாவுக்கு வெண்கலம். 87 கிலோ எடைத் தூக்கி மீராபாய் சானு தன் சொந்த சாதனையையே சமன் செய்தார். 2017-ல் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற போது இதே 87 கிலோதான் தூக்கினார். மொத்தம் 202 கிலோ தூக்கினார் மீராபாய் சானு. மொத்தமாக சீன வீராங்கனை ஹூ ஷிஹூ 210 கிலோ தூக்கி தங்கம் என்றார்.5 ஆண்டுகளுக்கு முன்பாக ரியோவில் மீராபாய் சானு கடும் ஏமாற்றமளித்தார், ஆனால் அதன் பிறகு கடுமையாக உழைத்து நாட்டுக்காக இப்போது ஒலிம்பிக் வெள்ளி வென்று வரலாறு படைத்துள்ளார். 2021 ஆசிய வெய்ட்லிப்டிங்கில் 119 கிலோ எடைத்தூக்கினார் மீராபாய். இது உலக சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. இது கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவின் தங்கப் பதக்கம் ஆகும்.

இந்நிலையில் தனது ஒலிம்பிக் பதக்கத்தை நாட்டுக்காக சமர்ப்பிப்பதாக மீராபாய் சானு தெரிவித்துள்ளார். “என்னுடைய கனவு பலித்துள்ளது. இந்த பதக்கத்தை என் நாட்டுக்கு சமர்ப்பிக்கிறேன். இந்த பயணத்தில் என்னுடன் இருந்த கோடான கோடி இந்திய மக்களுக்கும், அவர்களின் பிரார்த்தனைகளுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக எனது குடும்பமும், எனது அம்மாவும் பல தியாகங்களை செய்துள்ளனர். அரசு, விளையாட்டு அமைச்சகம் என எனது பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த எல்லோருக்கும் நன்றிகள். எனது பயிற்சியாளர் விஜய் ஷர்மா சாருக்கு ஸ்பெஷல் நன்றி” என மீரபாய் சானு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக மீராபாய் சானுவுக்கு வாழ்த்து தெரிவித்த மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங், மகத்தான சாதனை புரிந்ததற்காக அவருக்கு பரிசுத்தொகையாக ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Views: - 120

0

0