‘எனது குடும்பத்திற்கு உதவுங்கள்’: பேஸ்புக்கில் உதவி கேட்ட சிறுமி…தேடிவந்து உதவிய திரிபுரா முதலமைச்சர்..!!

6 June 2021, 1:29 pm
Quick Share

அகர்தலா: திரிபுராவில் குடும்பத்தின் ஏழ்மை நிலை குறித்து கூறிய சிறுமியின் கோரிக்கையை முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ் உடனடியாக நிறைவேற்றி வைத்து உள்ளார்.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் வறுமையின் வாடும் சிறுமி ஒருவர் தனது குடும்பத்தின் நிலைமை குறித்து முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பேஸ்புக் சமூக வலைதளம் வாயிலாக சிறுமியின் நிலை அறிந்து அவரது தேவைகளை முதலமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பிப்லப் குமார் தேவ் உடனடியாக நிறைவேற்றியுள்ளார்.

முதலமைச்சரின் இந்த செயல் சிறுமியின் குடும்பத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அகர்தலாவின் புறநகர் பகுதியைச் சேர்ந்த உத்தம் தாஸ் மகள் பர்ஷா, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று உள்ளார். சமீபத்தில், அவரது குடும்பம் ஒற்றை அறை வீட்டில் வசிப்பதாகவும், படிப்பதற்கான மேசை இல்லாதது சிரமமாக இருப்பதாகவும், பேஸ்புக் சமூக வலைதளத்தில் கூறி இருந்தார்.

அதற்கு முன், அவரது தாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி இருந்தார். இவற்றை பார்த்த முதலமைச்சர், சிறுமிக்கு உதவும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உடனடியாக படிக்கும் மேசை, மருந்துகள், மளிகை மற்றும் உணவு பொருட்கள், சிறுமியின் வீட்டிற்கு நேற்று முன்தினம் வந்து சேர்ந்தன.

இதுபற்றி பர்ஷா கூறும்போது, என் தந்தைக்கு போதிய வருமானம் இல்லாமல், குடும்பம் வறுமையில் தவிக்கும் நிலையில், முதலமைச்சரின் உதவி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

Views: - 207

0

0