திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர் கொரோனாவுக்கு பலி…! தேவஸ்தானம் அதிர்ச்சி

6 August 2020, 9:29 pm
Tirupathi temple updatenews360
Quick Share

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். 

மார்ச்சில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட சமயத்தில், திருப்பதி கோவிலிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. ஆனால் வழக்கமான பூஜைகள் நிறுத்தப்படவில்லை.

பின்னர் ஜூன் 11ம் தேதி கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி தரப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக திருப்பதியில் கொரோனா தொற்று அதிகரிக்க ஆரம்பித்தது.

7000 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால் மீண்டும் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. காலை 6 மணி முதல் முற்பகல் 11 மணி வரை மட்டுமே கடைகள் உணவகங்கள் திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது.

இந் நிலையில் திருப்பதி கோவில் அர்ச்சகராக பணியாற்றிய சீனிவாசாச்சார்யா கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். சீனிவாசன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Views: - 13

0

0